தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்த முதியவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி பெருமாள்புரத்தை சேர்ந்தவர் லூர்துசாமி மகன் தனபாலன் (61). இவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. தினசரி அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பூ மார்க்கெட் அருகே உள்ள மதுபான கடையில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு மயங்கி கிடந்தாராம்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


