ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுவனை கத்தியால் குத்தியதாக தலைமைக் காவலரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் சிவனேசன் என்பவர், தனது குழந்தைகளை பள்ளிக்கு விட சென்றபோது வேகமாக பைக்கில் குறுக்கே வந்த சிறுவனிடம் தகராறில் ஈடுபட்டு சிறுவனை பாக்கெட் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் காவலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


