எவ்வளவு நெருக்கடியை கொடுத்தாலும் பாஜகவின் கனவு தமிழகத்தில் ஓரு போதும் பலிக்காது என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வக்கீல்கள் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட வக்கீல் அணி செயலாளர் செல்வக்குமார் வரவேற்புரையாற்றினார்.
தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் சிறப்பு திருத்தம் செய்யும் பணியினை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது. பீகார் தேர்தலில் வாக்கு திருட்டு நடப்பதாகவும் மாற்று கட்சியினர் என்று கருதப்படுவோரை பட்டியலில் நீக்கம் செய்யும் முயற்சியில் மோடி அரசின் பேச்சைக் கேட்டுக்கொண்டு தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளில் ஈடுபட்டு வருவதாக ராகுல் எம்.பி பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் தமிழகத்திலும் இது போன்று சம்பவங்கள் நடந்து விடாமல் திமுக வினர் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காக ஓவ்வொரு மாவட்டத்திற்கும் திமுக வக்கீல் அணி முக்கிய நிர்வாகிகளை அனுப்பி வைத்து இது சம்பந்தமாக நாம் வாக்காளர் திருத்த பணியின் போது செயல்படுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. திமுக வக்கீல் அணி மாநில இணைச்செயலாளர் ரவிச்சந்திரன் சட்டத்துறை துணைச்செயலாளர் ராஜா முகமது திமுக தலைமைகழக வக்கீல் மனோஜ் ஆகியோர் ஆலோசனை வழங்கினார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் 2026ல் மீண்டும் முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும் அதற்காக நாம் அனைவரும் இப்போதே களப்பணிகளை துவங்க வேண்டும் பீகாரில் செயல்படுவது போன்று தமிழகத்தில் வாக்கு திருட்டை தடுக்க நாம் எவ்வாறு திருத்தப்பணிகள் நடக்கும் போது செயல்பட வேண்டும் என்பதற்காக நமக்குஆலோசனை வழங்கியுள்ளார். அவர்கள் தெரிவிக்கும் ஆலோசனையை முழுமையாக வக்கீல்களும் கட்சி நிர்வாகிகளும் கேட்டு அதன்படி செயல்பட வேண்டும் திமுக வினர் வாக்களர் சிறப்பு திருத்த பணியின் போது மிக எச்சரிக்கையுடன் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். எவ்வளவு நெருக்கடியை கொடுத்தாலும் பாஜகவின் கனவு தமிழகத்தில் ஓரு போதும் பலிக்காது என்று பேசினார்.
கூட்டத்தில் தெற்கு மாவட்ட இளைஞர் அமைப்பாளர் ராமஜெயம், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, கலை இலக்கிய அணி அமைப்பாளர் ரகுராமன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரம்மசக்தி, செந்தூர்மணி, மாடசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஜெபதங்கம் பிரேமா, ஜெகன், ஓன்றிய செயலாளர்கள் இளையராஜா, சரவணக்குமார், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், சதீஷ்குமார், கோட்டாளம், பகுதி செயலாளர்கள் சிவக்குமார் ஆஸ்கர், ஓன்றிய துணைச்செயலாளர் நாராயணன், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, மற்றும் வக்கீல் கிருபாகரன், கபடி கந்தன், பாரதிராஜா, ஒன்றிய பேரூர் செயலாளர்கள் வக்கீல் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


