கயத்தார் பகுதியில் கனமழையினால் பாதிப்படைந்த பயிர்களுக்கு இழப்பீடு மற்றும் காப்பீடு தொகையை விரைவில் வழங்கிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தாெடர்பாக அனைத்து விவசாயிகளின் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், “தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் தாலுகா பகுதியில் கடந்த ஆண்டு பருவமழை மாற்றத்தினால் ஏற்பட்ட கனமழையினால் பயிர்கள் முழுவதும் சேதமடைந்து விட்டது. சேதமடைந்த பயிர்களை அரசு தரப்பில் பார்வையிட்டு அதற்கான உரிய ஆவணங்களையும் விவசாயிகளிடமிருந்து அரசு அதிகாரிகள் பெற்று சென்றனர்.
ஆனால் இதுவரை விவசாயிகளின் வங்கி கணக்கில் இழப்பீடு தொகையோ காப்பீடு தொகையோ வரவு வைக்கப்படவில்லை. ஆகவே மாவட்ட ஆட்சியர் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகை மற்றும் காப்பீடு தொகையை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்..


