தூத்துக்குடியில் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து செலுத்தினர்.
பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்தவர் டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார். அன்னாரது 89வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள முழுவுருவசிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரா.கௌதம், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தர், திருச்செந்தூர் நகரமன்ற துணைத்தலைவர் ஏ.பி.ரமேஷ், சிவந்தி ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் மேலாளர் வெங்கட்ராமராஜ் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பா.சிவந்தி ஆதித்தனார் 89வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் அந்தோணியார் கோவில் அருகில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது திரு உருவ படத்திற்கு நாடார் மகிமை தலைவரும் தெட்சன மாற நாடார் சங்க நிர்வாக குழு உறுப்பினருமான கே.ஏ.பி. சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நிர்வாக குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், ஜெயக்கொடி, தொழிலதிபர் பிபிஎம்டி பொன் குமரன், உப்பு உற்பத்தியாளர் ஏஆர்ஏஎஸ் தனபாலன், எம்எஸ்ஆர். தாமஸ், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிவந்தி ஆதித்தனார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் பொதுக்குழு உறுப்பினர் கோட்டூராஜா, பகுதி செயலாளர் ரவீந்திரன் மாநகராட்சி கவுன்சிலர்கள் பேபி ஏஞ்சலின், மும்தாஜ், சுரேஷ்குமார், வட்டச் செயலாளர் பொன்ராஜ் மேயரின் உதவியாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதிமுக: தூத்துக்குடி மதிமுக சார்பில் மாநகரச் செயலாளர் முருக பூபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, இந்நிகழ்ச்சியில் தொம்மை, செந்தாமரை, கண்ணன், சுந்தர்ராஜ், முருகேசன், சரவணப்பெருமாள், பொய்யா மொழி ,காசிராஜன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சமத்துவ மக்கள் கழகம் : தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் வஉசி மார்க்கெட்டில் அலங்கரித்து வைக்கப்பட்ட சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்டத் துணைச் செயலாளர் அருள்ராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் உதயசூரியன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சகாயராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயகசமாடன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு, முத்துக்குமார், தொழிலதிபர் பொன் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் : தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர், காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், மாநகரச் செயலாளர் இக்னேஷியஸ்,மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


