தென்திருப்பேரை பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்ட குடிநீர் இணைப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மத்திய அரசு புனரமைப்புக்கான அடல் இயக்கம் மற்றும் நகர்ப்புற மறுசீரமைப்பு 2.0 (அம்ருத் 2.0) திட்டத்தை செயல்படுத்த கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதன்படி, தென்திருப்பேரையில் மத்திய அரசு சார்பில் ஏழை எளிய மக்களின் குடிநீர் இணைப்பு கனவை நனவாக்கும் விதமாக மாண்புமிகு பாரத பிரதமர் மோடியால் கொண்டுவரபட்ட அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மத்திய அரசின் 4.21 கோடி நிதி உதவியுடன் நடைபெற்று வருகிறது.
இத் திட்டம் 2025-2026 ஆண்டுக்குள்ளதாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு விண்ணப்ப கட்டணம் ரூ200 மற்றும் ஒரு குடிநீர் இணைப்புக்கு ரூ 6000 என்று பேரூராட்சி நிர்வாகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டு கட்டணங்களையும் ரத்து செய்யகோரி பா.ஜ.க சார்பில் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தியதன் காரணமாக பேரூராட்சி மன்ற தலைவர் குடிநீர் இணைப்பு கட்டணத்தை ரூ 3000 ஆக குறைப்பதற்கு அனைத்து கவுன்சிலர்களும் கையெழுத்து பெற்றார்.
ஆனால் இது வரை குடிநீர் இணைப்பு கட்டணத்தை 3000 ஆக குறைக்காத காரணத்தினால், பா.ஜ.க விவசாய அணி மாநில செயலாளர் திரு சிவமுருக ஆதித்தன் தலைமையில் தென்திருப்பேரை பேரூராட்சியில் குடிநீர் இணைப்பு கட்டணத்தை ரூ3000 ஆக குறைக்க வலியுறுத்தியும் முற்றிலும் பழுதடைந்த நிலையில் உள்ள குரங்கணி ரோடு தெருவில் புதிய சாலை அமைத்து தர கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கபட்டது.
இந்நிகழ்வில் தென்திருப்பேரை பா.ஜ.க கவுன்சிலரும் ஆறுமுகநேரி மண்டல் பார்வையாளருமாகிய குமரேசன் ஆழ்வை கிழக்கு மண்டல் துணை தலைவர் பால்வண்ணன் அரசு தொடர்புதுறை மண்டல் தலைவர் கெருடப்பன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நசரேன் மண்டல இளைஞரணி செயலாளர் லெட்சுமணன் பிரச்சார பிரிவு மண்டல செயலாளர் கோவிந்தன் தமிழ் வளர்ச்சி பிரிவு மண்டலத் தலைவர் கார்த்திக்ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.


