ஆறுமுகநேரியில் மின்கம்பம் மீது பைக் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி, பெருமாள்சாமி கோயில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பன்னீர்செல்வம். தொழிலாளி. இவர் கடந்த 21ஆம் தேதி தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சந்தனமாரி மகன் அந்தோணி அமல்தாஸ் என்பவருடன் பைக்கில் நத்தகுளத்தில் குளிக்கச் சென்றாராம்.
பைக்கை அந்தோணி அமலதாஸ் ஓட்டியுள்ளார். ஆறுமுகநேரி சீனந்தோப்பு சாலையில் சென்றபோது எதிர்பாராமல் சாலையோர மின்கம்பம் மீது பைக் மோதியதாம். இதில் பலத்த காயமுற்ற இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பன்னீர்செல்வம் உயிரிழந்தார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


