தூத்துக்குடியில் சாலையோர வியாபாரிகளுக்கான மானியத்துடன் வங்கி கடன் வழங்கும் சிறப்பு முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வியாபாரம் செய்து கொள்ள மாநகராட்சி சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சியிலிருந்து அடையாள அட்டை வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் தூத்துக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு துவக்கி வைத்தார்.
அதனை அடுத்து மாநகராட்சி நிர்வாகம் படிப்படியாக மாநகராட்சி ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வங்கிகள் மூலம் லோன் வழங்கப்பட்டு வருகிறது அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் பல்வேறு வங்கிகள் முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. முகாமில் பொதுமக்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா தலைமை தாங்கினார். மாநகராட்சி சுகாதார நல அலுவலர் டாக்டர் சரோஜா முன்னிலை வகித்தார்.
சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டையை வழங்கி மேயர் ஜெகன் பேசுகையில்: சாலையோர வியாபாரிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி துவக்கி வைத்தது ஆரம்பத்தில் 50 கார்டு தான் இருந்தது. இப்போது 9997 வியாபாரிகள் கணக்கெடுக்கப்பட்டு லோன் வாங்கியுள்ளனர். முதலில் 6325 பேருக்கு இரண்டாவது 3267 பேர் மூன்றாவது லோன் 406 பேர் 50 ஆயிரம் ரூபாய் லோன் பெற்றுள்ளன கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.
1862 கார்டு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அன்று வழங்கினார். 6325 பேருக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட கார்டு போக 4463 கார்டு அடிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அது வழங்கப்படும். மீன் வியாபாரி ஆக இருந்தாலும் சரி பூ வியாபாரி ஆக இருந்தாலும் சரி இந்த வருடம் இந்த லோன் வழங்கப்படுகிறது. பத்தாயிரம் ரூபாய் லோனுக்கு 2500 ரூபாய் மானியம் உள்ளது. இதனை சாலையோர வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு சாலையோர வியாபாரிகள் எங்கெல்லாம் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கணக்கெடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் காந்திமதி, முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ் தங்கம், கவுன்சிலர்கள் கனகராஜ், ரெக்ஸ்லின், திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்டசெயலாளர் ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், ராஜ்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளருமான ரவீந்திரன் போல் பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் ஞானமார்டின், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் வங்கி அலுவலர்கள், சாலையோர வியாபாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்


