தூத்துக்குடி மாவட்ட வன அலுவலராக இளையராஜா பதவி ஏற்றார். அவரை இயற்கை ஆர்வலர்கள் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமையில் சந்தித்தனர். பதவி ஏற்ற அவரை வரவேற்று பொன்னாடை போர்த்தி முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய “கொற்றை தூத்துக்குடி துறைமுகங்கள்” நூலை வழங்கினர். தாமிரபரணி ஆற்றங்கரையில் மரம் நடுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தாமிரபரணி ஆற்றங்கரையில் சுமார் 2 லட்சம் மரங்கள் வரை நடுவதற்கு வேண்டிய உதவிகளை செய்து தருவதாக மாவட்ட வன அலுவலர் உறுதியளித்தார். அப்போது மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


