நாசரேத் அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்தததில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள முதலைமொழி நடுத்தெருவை சேர்ந்தவர் கணபதி மகன் பர்னபாஸ் (55). டிராக்டர் ஓட்டுநர். இவருக்கு மனைவி பத்மா, 3 மகள்கள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் அவர், நேற்று மேலவெள்ளமடம் – வைத்திலிங்கபுரம் சாலையில் சென்றார்.
முத்துநகர் அருகே சென்றபோது திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் அவர் கீழே தவறி விழுந்தாராம். மேலும், அவர் மீது டிராக்டர் ஏறியதில் சம்பவ இடத்திலே உயிழந்தார். இத்தகவல் அறிந்த நாசரேத் போலீசார் அவரது சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகி்ன்றனர்.


