தூத்துக்குடி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை மாவட்ட கால்பந்து போட்டியில் புனித லசால் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது.
தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான முதலமைச்சர் கோப்பைக்கான, கால்பந்து போட்டி, தூத்துக்குடி மாவட்ட விளையட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 63 அணிகள் கலந்து கொண்டன.
கால்பந்து: இப்போட்டிகளில் தூத்துக்குடி, புனித லசால் மேல்நிலைப்பள்ளி அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடம் பெற்று, இறுதிப்போட்டியில் புன்னக்காயல், புனித ஜோசப் பள்ளி அணியினருடன் சிறப்பாக விளையாடி 1-0, கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். முதலிடம் பெற்ற தூத்துக்குடி, புனித லசால் மேல்நிலைப்பள்ளி அணிக்கு ரொக்க பணம் ரூ.54000/- மற்றும் சான்றிதழ்கள் வழங்ப்பட்டது. இப்போட்டியில் மாணவர்கள் ஜோசுவா, சாமுவேல் மற்றும் வர்ஷன் ஆசியோர் சிறப்பாக விளையாடினர்.
கூடைப்பந்து: தூத்துக்குடி, மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயன முதலமைச்சர் கோப்பைக்கான, கூடைப்பந்து போட்டியில் தூத்துக்குடி, புனித லசால் மேல்நிலைப்பள்ளி அணி சிறப்பாக விளையாடி மூன்றாம் இடம் பெற்றனர். இப்போட்டிகளில் மாணவர்கள், ஆர்ட்ரின், சாத்ராக் மற்றும் மணிகண்டன் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். மூன்றாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு ரூபாய்.12000/- மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
வாலிபால் (கையுந்து பந்து): பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற வருவாய் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் தூத்துக்குடி, புனித லசால் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பாக விளையாடி இரண்டாம் இடம் பெற்றனர். இப்பாட்டியில் மாணவர்கள் ஜெயராஜ், ஆனந்த், பவன்ஜி மற்றும் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் அருட்சகா. பெர்டின் தலைமையாசிரியர் ஜான்பால், உதவி தலைமையாசிரியர் மேகஸ்வெல், மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன், கால்பந்து பயிற்றுநர்கள் நிக்கோலாஸ் செந்தில், மாவட்ட கால்பந்து கழக தலைவர் சேசையா வில்வராயர், செயலாளர் லூர்து பீரிஸ், மாவட்ட வாலிபால் பயிற்றுநர் கிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயக்குமார், தர்மர், ஜாய்சன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.


