தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் துணை ஆட்சியர் நிலையில் பணி புரிந்து வந்த 17 பேருக்கு பணி நியமனம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் “புதுக்கோட்டை துணை ஆட்சியர் (பயிற்சி) கௌதம் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்படுகிறார்.
விருதுநகர் கூடுதல் ஆட்சியர் (பயிற்சி) ராமசுந்தரி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் தூத்துக்குடி மண்டல மேலாளராக நியமிக்கப்பட்டார்.
கன்னியாகுமரி துணை ஆட்சியர் பயிற்சி மா. பிரியா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது போல் தமிழ்நாடு முழுவதும் 17 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


