நாசரேத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பா மகன் முத்துக்குமார் (32), இவர் நாசரேத் மூக்குபேறியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சரியாக வேலைக்கு செல்வதால் அவரது குடும்பத்தினர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முத்துக்குமார் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நாசரேத் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


