காயாமொழி அரசு மேல்நிலைப் பள்ளியில் கனிமொழி எம்.பி, மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் கலந்துகொண்டு மரம் நடும் நிகழ்சச்யை துவங்கி வைத்தனர். அந்த வேளையில் அனைத்து பள்ளிகளில் ஒன் டே பிளான்டேசன் டிரைவ் நிகழ்ச்சியினை நடத்தி மரக்கன்றுகள் நடவேண்டும் என்றும் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களையும் மரக்கன்றுகள் நடுவதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். மாவட்ட கல்வி அலுவலக இணையதளத்தில் அனைத்து மாணவர்களும் அம்மா அல்லது பாப்பாளருடன் மரக்கன்றுகள் நட்ட புகைப்படம் மற்றும் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளியிலும் இன்று மரம் நடு நிகழ்ச்சி நடந்தது. செய்துங்கநல்லூர் ஜோஸ்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடந்தது. பள்ளி முதல்வர் ஜெய்தூன் பீவி தலைமை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னிலை வகித்தார். மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் தொண்டு நிறுவனம் மேலாளர் வேல் முருகன் மரக்கன்றுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அதன் பின் பள்ளி வாளகத்தில் மாணவர்களை கொண்டு மரங்கள் நடப்பட்டது.


