அறிவியலுக்கு புறம்பான மற்றும் காவியமயத்தை திணிக்கும் வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
யுஜிசி மானிய குழுவின் வரைவு அறிக்கையானது கல்வியை காவிமயம் ஆக்குவதோடு, அறிவியலுக்கு புறம்பான ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை கல்வியில் திணிக்க முயல்வதாகவும், அதனைக் கண்டித்தும், LOCF அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தியும் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி வாசல் அருகே அருகே இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் ராம்குமார் தலைமையில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


