தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் டிஎஸ்பியாக ஆவுடையப்பன் என்பவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் இன்று சாத்தான்குளம் வர்த்தக சங்கத்தின் சார்பில் சங்கத் தலைவர் அப்பு கண்ணன் தலைமையிலான சங்க நிர்வாகிகள் டிஎஸ்பி-ஐ நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து சாத்தான்குளம் முழுவதும் புதிதாக சிசிடிவி கேமரா அமைக்க வர்த்தக சங்கம் டிஎஸ்பியிடம் கோரிக்கை விடுத்தது.
இந்த நிகழ்வின் போது எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய “நவீன தாமிரபரணி மகாமித்யம்” என்ற நூலினை தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சங்கர் டி.எஸ்.பி ஆவுடையப்பனுக்கு நூலை பரிசாக வழங்கி கவுரவித்தார்.


