தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 1200 வாக்காளர்கள் என்ற அதிகபட்ச வரம்பைக் கொண்டு வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு மேற்கொள்ளுவதற்காக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டமானது மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 1200 வாக்காளர்கள் என்ற அதிகபட்ச வரம்பைக் கொண்டு வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு மேற்கொள்ளுவதற்காக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டமானது மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அவாகள் தலைமையில் இன்று (30.08.2025) நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி அரசியல் கட்சியனரின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் ஆகியவற்றைப் பெற்று தேர்தல் ஆணைய விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் ஆகியவற்றிற்குட்பட்டு தீர்வுகான அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படியும் மேலும் தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலாளர், சென்னை அவர்களின் கடித எண். 6400/ 2025-1 நாள் 08.08.2025 மற்றும் கடித எண் 5000/2025-10, நாள்: 12.08.2025 ன்படி வாக்குச்சாவடி மறுசீரமைக்கும் பொருட்டு, வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1200-க்கு மேல் இருப்பின் அவற்றினை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைத்திடவும் கட்டிட மாற்றம்/இடமாற்றம் போன்றவற்றை தயாரிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாக்குச்சாவடிக்கு குறைந்தபட்சம் 300 வாக்காளர்கள் இருந்து, மேலும், வாக்களிக்க 2 கி.மீ தூரத்திற்கு மேல் செல்லும் பட்சத்தில் வசிக்கும் பகுதியில் வாக்குச்சாவடி அமைத்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணைய கடித எண் 23/2025-இ.ஆர்.எஸ்(தொகுதி.2) நாள் 24.06.2025 நாளிட்ட கடிதத்தின்படி, நகர்ப்புறங்களிலுள்ள உயர் மட்ட கட்டிடங்கள், குடியிருப்பு நல சங்கங்கள் , ஒருங்கிணைந்த வீட்டு வசதி மையங்கள் மற்றும் உயர் குடியிருப்பு வளாகங்களில், பொதுவான கட்டிடங்கள் அல்லது சமுதாய கூடங்கள் தரைதளத்தில் இருந்தால் அவ்விடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குடிசைப்பகுதி குடியிருப்பு பகுதிகளில் புதிய வாக்குச்சாவடி அமைக்க வழிவகையிருப்பின் வாக்குச்சாவடி அமைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வாக்குச்சாவடிகள் அமைத்திட பிரேரணை அனுப்பிடும் முன்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் அரசியல் கட்சியினருடன் கலந்தாலோசனை செய்து ஷை கூட்ட நடவடிக்கை அறிக்கையுடன் அனுப்பிடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் பதிவு அலுவலர்/உதவி வாக்காளர் பதிவு அலுவலரால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தி அவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மற்றும் பொது மக்களின் வேண்டுகோளின்படியும் வாக்குச்சாவடிகள் பிரித்தல், வாக்குச்சாவடி இடமாற்றம் / பெயர் மாற்றம் செய்தல் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு பின்வருமாறு அறிக்கை பெறப்பட்டுள்ளது.
சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் பதிவு அலுவலர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளவாறு தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே 1627 வாக்குச்சாவடிமையங்கள் அமையப் பெற்றிருந்தது, தற்போது 1200 வாக்காளர்களுக்கு மேல் மற்றும் 2 கி.மீ தூரத்திற்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை பிரித்து 237 புதிய வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்படவுள்ளது.
இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களின் மீது தங்களது எழுத்துபூர்வமான ஆட்பேசணைகள் மற்றும் ஆலோசனைகளை ஏழு தினங்களுக்குள் தவறாது சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்/மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஆட்சேபணைகள் ஏதும் இல்லாத பட்சத்தில், வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் முன்மொழிவுகள் பெறப்பட்டு சிறப்பு தீவிர திருத்த கால அட்டவணை இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டவுடன் சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச்சாவடி மறுசீரமைத்தல் முன்மொழிவுகள் சமர்பிக்கப்பட்டு புதிய வாக்குச்சாவடிகளுக்கு ஒப்புதல் பெறப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலர், சென்னை அவர்களின் கடித எண் 6135/ தேர்தல்-1/2025-1 நாள்:01.08.2025-ன்படி இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர திருத்தம் விரைவில் தொடங்கப்பட உள்ளதால் , இப்பணியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கு , மிகவும் அவசியம் எனக்கூறி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடி நிலை முகவரை நியமனம் செய்ய அறிவுரை வழங்கியுள்ளதால் , வாக்குச்சாவடிநிலை முகவர் நியமனப்படிவம் டீடுயு 2 படிவத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் புகைப்படம் மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றினை குறிப்பிடும் வகையில், புதிய படிவத்தில் இதுவரை சமர்ப்பிக்காத அரசியல் கட்சியினர் விரைவில் அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், கோவில்பட்டி உதவி ஆட்சியர் (கோவில்பட்டி) ஹீமான்ஷீ மங்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சேதுராமலிங்கம், கோட்டாட்சியர்கள் சுகுமாரன் (திருச்செந்தூர்), ம.பிரபு (தூத்துக்குடி), தெற்கு மாவட்ட (திமுக) அக்னல், CPI (M) ராஜா மாநகர செயலாளர் (தி.மு.க) ஆனந்த சேகரன், மாநகர இளைஞர் அணி துணை செயலாளர் (தி.மு.க) ஐ.ரவி, அ.இ.அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி இணை செயலாளர் தெற்கு மாவட்டம் ஆ.முனியசாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் P.சரவணபெருமாள், பாரதிய ஜனதா கட்சி சிவராமன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சகாயராஜா, மாவட்ட செயலாளர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் (தி.மு.க.) ஆறுமுகப்பெருமாள், மாவட்ட பொருளாளர் (தே.மு.தி.க.) விஜயன், இந்திய தேசிய காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், வடக்கு மாவட்ட துணை தலைவர் பாரதிய ஜனதா கட்சி செந்தில்குமார் பிரபு, மத்திய ஒன்றிய செயலாளர் (தி.மு.க.) ஜெயக்கொடி, மாடசாமி C.P.I.), மாநில குழு ஞானசேகரன், மாவட்ட செயலாளர் விடுதலை சிறுத்தை கட்சி டிலைட்டாரவி, D.M.I.C. பாஸ்கரன், நாம் தமிழர் கட்சி பரதேசி, நாம் தமிழர் கட்சி அலங்காரசகாயம், நாம் தமிழர் கட்சி ரமேஷ்பாபு, காங்கிரஸ் தெற்கு மாவட்டம் முத்துமணி மற்றும் அரசு உயர்அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


