தூத்துக்குடியில் ரகளையில் ஈடுபட்டதாக 6 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி முள்ளக்காடு அருகில் திருச்செந்தூர் பிரதான ரோட்டில் ஆயுதங்களுடன் சிலர் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 6 பேரை மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்த 2 அரிவாள்கள், ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வள்ளிநாயகபுரம் தூத்துக்குடி எஸ்என்ஆர் நகரை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ராஜா என்ற எலி (27), சாயல்குடி தேவகுளம் பாப்பாக்குளம் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் மகன் ஆரோன் தயாளன் (23), தூத்துக்குடி முனியசாமிபுரம் முதல் தெரு சாமி மகன் தமிழரசன் என்ற ஆல்பர்ட் (23), முத்தையாபுரம் நேசமணி நகர் முதல் தெருவை சேர்ந்த சகாய மகன் ஜோசப் வயது (22), முத்தையாபுரம் நேசமணி நகரை சேர்ந்த முருகன் மகன் மாரி செல்வம் (19), மற்றும் இளஞ்சிறார் ஆறு பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


