கோவில்பட்டியில் நகராட்சி தற்காலிக ஊழியரை மிரட்டி தாக்கியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஸ்டாலின் காலனி, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி மகன் ஈஸ்வரன் (27). நகராட்சியில் தற்காலிகமாக ஓட்டுநராக வேலை செய்து வரும் இவர் மற்றும் இவரது உறவினர் முருகன் ஆகிய இருவரும் சம்பவத்தன்று இரவு புது சாலையில் உள்ள ஃபாஸ்ட் ஃபுட் கடையில் நின்று கொண்டிருந்தனராம். அப்போது அங்கு வந்த 2 பேர் ஈஸ்வரனிடம் ஜாதி பெயரை கூறி, தகராறு செய்து தாக்கினார்களாம்.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை கண்டித்ததையடுத்து இருவரும் கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பியோடி விட்டார்களாம். இதில் காயமடைந்த ஈஸ்வரன், அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, ஈஸ்வரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சங்கரலிங்கபுரம் 4 ஆவது தெருவை சேர்ந்த மகாராஜா மகன் சுப்புராஜ் (23), கீழ பாண்டவர்மங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த பொன்னுத்துரை மகன் தீபக் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


