கோவில்பட்டி நகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.
கோவில்பட்டி நகராட்சி 26 மற்றும் 32 வது வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் வக்கீல் தெருவில் உள்ள நந்தினி ஸ்ரீ மகாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் பார்வையிட்டார்.
மேலும் மின் இணைப்பு மாற்றம் வேண்டி விண்ணப்பித்த பயனாளிக்கு உடனடியாக அதற்குரிய ஆவணத்தை வழங்கினார். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள படி கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார். இந்த முகாமில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் 225 உட்பட மொத்தம் 437 விண்ணப்ப மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
இந்நிகழ்வின் போது தாசில்தார் பாலசுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், துணை தாசில்தார் பாலு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் கோவில்பட்டி மேற்கு நகர திமுக செயலாளரும் நகர மன்ற தலைவருமான கருணாநிதி, கோவில்பட்டி கிழக்கு நகர திமுக செயலாளர் சுரேஷ், கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன், கோவில்பட்டி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


