தூத்துக்குடியில் வட்டத்தெப்பம் பகுதி வணிகர் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வர்த்தக மத்திய சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில துணைத் தலைவர் பழரசம் ப.விநாயக மூர்த்தி, தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத் தலைவர் ஜவஹர், செயலாளர் தெர்மல். சொ.ராஜா, பொருளாளர் இரா.விக்னேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தலைவராக சரவணமூர்த்தி செயலாளராக, ராஜேஷ், பொருளாளராக சரவணக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டனர். இவ்விழாவில் வணிகர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


