மற்ற மாநிலங்களுக்கு நிதி ஆயோக் பரிந்துரைக்கும் நிதி முழுமையாக வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும் ஏன் வஞ்சிக்கப்படுகிறது? என்று மக்களவையில் கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பினார்
மக்களவையில் இன்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, நிதி ஒதுக்கீடு குறித்து பஞ்சாயத்து ராஜின் அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங்கிடம் கேள்விகளை முன்வைத்தார்.
அதில், “நிதி ஒதுக்கீடு செய்வதில் ஏதேனும் விதிமுறை உள்ளதா? பிறகு ஏன் தமிழ்நாட்டிற்கு நிதி குறைக்கப்படுகிறது?தமிழ்நாட்டைத் தவிர, மற்ற மாநிலங்களுக்கு நிதி அயோக் பரிந்துரைக்கும் நிதி முழுமையாக வழங்கப்படுகிறது,
ஆனால் தமிழ்நாடு மட்டும் வஞ்சிக்கப்படுகிறது. 2017-18-ம் ஆண்டுகளில் ரூ.731 கோடியும் அதற்கு அடுத்த ஆண்டு ரூ.800 கோடியும் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் ரூ.400 கோடியாக குறைக்கப்பட்டது ஏன்? என்று பஞ்சாயத்து ராஜின் அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங்கிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.


