தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் நேற்று நடந்த சிறப்பு திருப்பலியில் மீன்பிடி, உப்பு ஆலை, பனைத் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் திரளாக பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
தூத்தக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் செபமாலை, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் நடந்து வருகிறது. விழாவில் 3-வது நாளான நேற்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலி, காலை 5.45 மணிக்கு இரண்டாம் திருப்பலி, காலை 6.30 மணிக்கு புனித அந்தோணியார் ஆலய பங்கு இறைமக்கள், திருச்சிலுவை சபை அருள்சகோதரிகள், திருச்சிலுவை ஆங்கில மற்றும் தமிழ் பள்ளிகள், காலை 7.30 மணிக்கு திரேஸ்புரம் பங்கு இறைமக்கள், சலேசிய துறவிகளும் கல்வி நிறுவனங்களும்,
காலை 8.30 மணிக்கு அங்காரத்தட்டு பங்கு இறைமக்கள், புனித கார்மேல் அன்னை அருள் சகோதரிகள், காலை 9.30 மணிக்கு லசால் அருள் சகோதரிகள், லசால் மேல்நிலைப்பள்ளி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. காலை 11 மணிக்கு கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் மீன்பிடி, உப்பு ஆலை, பனை தொழிலாளர்களுக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான தொழிலாளர்கள குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
விழாவை முன்னிட்டு வருகிற 3-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு புதுநன்மை திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு திவ்வி நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர் நடக்கிறது 4-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கர்தினால் அந்தோணி பூலா தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. 5-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலி, இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.


