தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கான காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் கருங்குளம் அருகேயுள்ள அரசர்குளத்தில் வைத்து நடைபெற்றது.
முகாமினை டி.வி.எஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர் இ.பாலசுப்ரமணியன் துவக்கி வைத்தார்கள்.
முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் ச.இசக்கி மஹாராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இம்முகாமில் 39 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 27 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினார்.
இம்முகாமில் எக்ஸ்ரே நுட்பனர் ச.கிருஷ்டி, சுகாதார பார்வையாளர் ந.முத்து லட்சுமி, ப.முத்துவேல், இடைநிலை சுகாதார செவிலியர்ஜெ.அக்வினா, சுகாதார தன்னார்வலர் சு.சுவிதா, சமுதாய வள பயிற்றுனர்வே.சந்தனமாரி, முல்லை மலர் மகளிர் சுய உதவிக் குழு ஊக்குனர் ம.கவிதா சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.


