புஷ்கர விழாவிற்கு வந்துள்ள லட்சக்கணக்கான பக்தர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் பேட்டியளித்துள்ளார்.
144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகின்ற மகாபுஷ்கர விழா தாமிரபரணி ஆற்றில் கோலாகலமாக துவங்கியது. இந்நிலையில் 8ம் நாளான நேற்று ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முறப்பநாட்டில் குருஸ்தலமாக விளங்கும் கைலாசநாதர் ஆலயத்தின் முன்பு பாயும் தாமிரபரணி நதியில் நீராட அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்செல்வன் வந்தார். அவர் ஆற்றில் நீராடி விட்டு, கைலாசநாதர் ஆலயத்தில் தரிசனம் செய்தார். பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.
தாமிரபரணி ஆற்றில் நடைபெறும் புஷ்கர விழாவிற்கு அரசு எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. மோசமான ஆட்சி நடப்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நிச்சமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மிகப்பெரிய வெற்றி பெற்று இந்த நதிக்கு மிகப்பெரிய புண்ணியத்தை தேடித்தரும். மத்திய அரசும் மாநில அரசும் தமிழகத்தையே ஒட்டுமொத்தமாக ஒதுக்குகிறது. தமிழ்நாட்டுக்கு வேண்டிய திட்டங்களை வாதாடி போராடி பெறக்கூடிய துணிச்சல் எடப்பாடி அரசிடம் இல்லை. டிடிவி தினகரன் ஆட்சி அமைக்கும் போது தான் மத்திய அரசு தமிழகத்தினை பார்த்து பயந்தபடி திட்டங்களை ஒதுகிடு செய்யும். தமிழகத்திற்கு வேண்டிய திட்டங்கள் நிச்சயம்கிடைககும் என அவர் தெரிவித்தார்.
கழக மாநில அமைப்பு செயலாளர் தென்மண்டல பொறுப்பாளர் மா£ணி’கராஜா, வடககு மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் எம்.எல்.எ, சாத்தூர் எம்.எல்.எ சுப்பிரமணியன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர்கலந்துகொண்டனர்.
இன்று காலை முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் மிக அதிகமான கூட்டத்தின் நீராடி வந்தனர். இன்று மிதுன ராசி காரர்கள் நீராடும்நாள் என்பதாலும், விடுமுறை நாளாக இருப்பதாலும் பகதர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.இதனால் வசவப்புரத்தில் இருந்து முறப்பநாடு வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தது. இதனால் நாலு வழிச்சாலை பாதையில் ஒரு வழி பாதை அடைககப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டது.


