தூத்துக்குடியில் கடன் தகராறில் 2பேரை அரிவாளால் வெட்டிய 4பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர், மாதா நகரைச் சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் மகன் ஷாம் (24). இவரிடம் பாலதண்டாயுத நகரை சேர்ந்த கௌதம் என்பவர் ரூ.2000 கடன் வாங்கினாராம். பலமுறை கேட்டு அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லையாம். நேற்று ஷாம் போன் செய்து கௌதமிடம் பணத்தை கேட்டாராம்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று சாம் தனது நண்பரான தாளமுத்து நகரை சேர்ந்த அந்தோணி பிச்சை மகன் மரிய அந்தோணி (22) என்பவருடன் அப்பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு தனது நண்பர்களுடன் வந்த கௌதம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டினாராம்.
இதனை தடுக்க முயன்ற அவரது நண்பர் மரிய அந்தோணிக்கும் அரிவாள் விட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த 2பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கௌதம் அவரது நண்பர்கள் உள்பட 4பேரை தேடி வருகிறார்கள்.


