தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருது ஆழ்வார்திருநகரி ஒன்றியம் பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, பேய்க்குளம் பள்ளி தலைமைஆசிரியர் இம்மானுவேலிடம் வழங்கினார்.விழாவில் பள்ளி ஆசிரியர் பாலன் உட்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
விருது பெற்ற பள்ளியை வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆழ்வார்திருநகரி பாலகிருஷ்ணன். கமலா. சாத்தான்குளம் பெனிஷ்கர் இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன். சி. லாசரஸ் முன்னாள் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்ரீதர், துணைத் தலைவர் சுந்தர்ராஜ், சீனிவாசன் அறக்கட்டளை மற்றும் சேவை மைய மண்டல அலுவலர் விஜயக்குமார் கள இயக்குநர் நந்தகோபால். உட்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


