ஓட்டப்பிடாரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தாலுகா அலுவலக கட்டிடத்தை, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா குத்து விளக்கேற்றினார். அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். விழாவில் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி, வட்டாட்சியர் அறிவழகன், துணை வட்டாட்சியர்கள் ராதா மகேஷ்வரி டென்சிங்டாங்கே, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


