செய்துங்கநல்லூர் அருகே உள்ள தூதுகுழியில் நேற்று மதியம் 3 மணிக்கு அடித்த காற்றில் புளியமரம் ஒன்று சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் செய்துங்கநல்லூர் போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சாலையில் விழுந்த மரங்கிளைகளை அகற்றினர். அதன் பின் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிசேகத்தினை முன்னிட்டு அதிக வாகனங்கள் இந்தவழியாக செல்லும் என எதிர்பார்த்த நிலையில்சாலையில் ஏற்பட்ட பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் செய்துங்கநல்லூர் போலிசார் இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வைஏற்படுத்திகொடுத்தனர். இதனால் போலிசாரை பொதுமக்களும், முருக பக்தர்களும் பாராட்டினார்கள்.


