திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வருகிற 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா 7ம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை குறித்து அமைச்சர் கீதா ஜீவனிடம் கேட்டபோது, “வருகிற 7ம் தேதி உள்ளூர் விடுமுறைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.


