தொடக்கக் கல்வித் துறையை கண்டித்து தூத்துக்குடியில் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொடக்கக் கல்வித்துறையில் கண்துடைப்பாக 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை அறிவித்துவிட்டு முறைகேடாக வழங்கப்பட்டுள்ள நிா்வாக மாறுதல் ஆணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உச்சநீதிமன்ற வழக்கை விரைந்து முடிவுக்குக் கொண்டுவந்து, பதவி உயா்வுடன் கூடிய ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில், தூத்துக்குடியில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா்கள் ஆண்டனி சாா்லஸ், ஆனந்தி, மாவட்டச் செயலா் கலை உடையாா், பொதுச் செயலா் மயில், மாவட்டப் பொருளாளா் ஜெயசீலி உள்ளிட்ட திரளானோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.


