நெல்லை சந்திப்பில் இருந்து அரசு பேருந்து முத்தாலங்குறிச்சிக்கு இயங்கி வருகிறது . இந்த பேருந்து நெல்லை சந்திப்பில் இருந்து மார்க்கெட், நீதிமன்றம் , வி.எம்.சத்திரம், செய்துங்கநல்லூர், விட்டிலாபுரம் வழியாக முத்தாலங்குறிச்சியை சென்று அடைக்கிறது. இந்த பேருந்து பழைய பேருந்தாக இயங்கி வந்த காரணத்தினால் அடிக்கடி பழுதானது. எனவே இந்த பேருந்துக்கு பதிலாக புதிய பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஒட்டபிடாரம் எம்.எம்.ஏ சண்முகையா, அரசு போக்குவரத்து அதிகாரிகளுக்குதொடர்ந்து மனு செய்து வந்தனர். இதற்கிடையில் இன்று காலை முத்தாலங்குறிச்சிக்கு புதிய பேருந்து இயக்கப்பட்டது . இந்த பேருந்தை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமையில் பொதுமக்கள் வரவேற்றனர். பூ மலை கட்டி, வாழை தோரணம் கட்டி நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு பொன்னாடை போர்த்தி புதிய பேருந்தை வரவேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக பிரமுகர் மாசிலாமணி, சுவீட் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய பேருந்து இயக்க காரணமாக இருந்த போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ சண்முகையா மற்றும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.


