தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவு நீர் பிரச்சனை தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஒன்றாம் கேட், ரயில்வே காலனி, மற்றும் காசு கடை பஜார் ஆகிய பகுதிகளை இணைக்கும் பாதாள சாக்கடை பாதையின் பகுதியில் ரயில்வே லைன் அமைக்கும் பணிகள் நடைபெற்றதால் பாதாள சாக்கடை கழிவு தண்ணீர் செல்லவில்லை என்ற மாநகர மக்களின் கோரிக்கையினை தொடர்ந்து அந்த பகுதியினை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
மேலும் உடனடியாக அதனை சரி செய்யும் பணிகளை ஆரம்பித்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் கூறி உள்ளேன் என்று தெரிவித்தார். ஆய்வின் போது, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


