தூத்துக்குடியில் பிளாஸ்டிக் இல்லா நாளை முன்னிட்டு ரோட்டரி கிளப் ஆஃப் பேர்ல் சிட்டி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சர்வதேச பிளாஸ்டிக் இல்லாத தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்காவில் காலை நடைபயிற்சியாளர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ரோட்டரி கிளப் ஆஃப் பேர்ல் சிட்டி சார்பில் துணிப் பைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வி.வி.டி செந்தில் கண்ணன், மீன்வளக் கல்லூரியின் முன்னாள் டீன் சுகுமாரன், ரோட்டரி கிளப் ஆப் பேர்ல்சிட்டி தலைவர் ஜே. விக்டர், செயலாளர் கிருஷ்ணசாமி, உடனடி முன்னாள் தலைவர் வி. விக்னேஷ் வீரபாகு, முன்னாள் தலைவர் முகம்மது இப்ராகிம், சுரேஷ் மற்றும் ராகவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


