தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி, அருணாச்சலம் நகரைச் சேர்ந்தவர் சோலையப்பன் மகன் முத்து மகேஷ் (25). இவருக்கு திருமணம் ஆகவில்லை. சாயர்புரம் அருகே உள்ள ஒரு பாலிபேக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து 12:00 மணி அளவில் மோட்டார் பைக்கில் தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
பொட்டலூரணி விலக்கு ரோடு பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் பைக் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


