தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 11 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆங்கிலத் துறைத் தலைவர் மற்றும் மொழிகள் துறைத் தலைவர், பிரபாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை வகித்து மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினர் பேசுகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கல்விப்படிப்பில் பெண்களிள் பங்களிப்பு அதிகரித்து உள்ளது என்று கூறினார்.
மேலும் அவர் இந்தியாவில் உயர் கல்வி கற்போர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் வகிப்பது பெருமை என்று கூறினார். கல்லூரி முதல்வா் அருட்சகோதரி ரூபா வரவேற்று ஆண்டு அறிக்கையை வாசித்தார். பட்டமளிப்பு விழாவில் 332 இளங்கலை பட்டமும் 66 முதுநிலை பட்டமும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் துறையின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது.


