தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஏஐசிசிடியூ சார்பாக சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பண்டாரம்பட்டியை சேர்ந்த துரைசாமி மகன் மனோகர் என்ற ஒப்பந்தொழிலாளி கடந்த 27ஆம் தேதி பணியில் இருக்கும் போது உயிரிழந்தார். ஆட்கள் பற்றாக்குறையால் 48 மணி நேரம் தொடர்ந்து இடைவிடாது பணியாற்றி வந்துள்ளார். ஓய்வில்லாமல் இரண்டு நாட்கள் பணி செய்ததன் விளைவாக பெல்ட் மூலமாக மின்சாரம் தாக்கி மனோகர் உயிரிழந்துள்ளார்.
இதற்கு முழுக்க முழுக்க மின்சார வாரியமே பொறுப்பாகும். உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளருக்கு மனைவி சுகன்யா, 10 வயதே ஆன மகன் ஷியாம் மனோகர் ஆகிய இருவர் உள்ளனர் நிர்கதியாக நிற்கும் மனைவி மற்றும் மகன் இறந்த ஒப்பந்த தொழிலாளியின் வருமானத்தில் வாழ்ந்து வந்தனர். அவரது இழப்பு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.
மின்சார வாரியத்தின் உயர்வுக்காக தன் இன்னுயிரை வழங்கியுள்ள ஒப்பந்த தொழிலாளர் மனோகர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணமும் அவரது மனைவிக்கு மின்சார வாரியத்தில் அவர் கல்வித் தகுதிக்கேற்ற நிரந்தர பணியை வழங்க வேண்டும் என்று ஏஐசிசிடியூ சார்பாக சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


