விளாத்திகுளத்தில் திமுக அரசுக்கு எதிராக பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் மற்றும் கடை வீதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் விளாத்திகுளம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில், அதிமுகவினர், “நாடு தூற்றும் நான்காண்டு ஸ்டாலின் ஆட்சி” என்ற தலைப்பில் துண்டு பிரசுரங்களை வழங்கி அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
திமுக அரசின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருள் புழக்கம், ஊழல்கள் மற்றும் நிதி முறைகேடுகள் உள்ளதால் வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையில் அமையும் கூட்டணிக்கு வாக்களிக்கும்படி, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.கே.பெருமாள், கழக ஒன்றிய, நகர செயலாளர்கள் பால்ராஜ், மாரிமுத்து, விளாத்திகுளம் முன்னாள் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வரதராஜப்பெருமாள், மகளிரணி சாந்தி, பிரியா உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.


