தூத்துக்குடியில் மத பிரச்சாரத்திற்காக வரும் வெளிநாட்டு பாதிரியார்கள் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி பாஸ்போர்ட், விசாவை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டூவிபுரம் 2வது தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜவேல் (69) என்பவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அளித்த மனு “தூத்துக்குடி 2-ம் கேட் அருகில் உள்ள அபிராமி மகாலில் வரும் ஜீன் 29 ஞாயிறு அன்று, மாலை 6 மணிக்கு அற்புத கூட்டம் நடைபெறுவதாக நகர் முழுவதும் வால்போஸ்டர், டிஜிட்டல் விளம்பரம், கையடக்க விளம்பர பத்திரிக்கை கொடுத்து விளம்பரபடுத்தி வருகிறார்கள்.
அதில் பாதிரியார் ஞானத்தன் சிங்கப்பூர் என்றும், பாதிரியார் மோசஸ் மலேசியா என்றும் விளம்பர படுத்தியுள்ளார்கள். இதன் மூலம் இருவரும் அயல்நாட்டைச் சார்ந்த பாதிரியார்கள் என்ற உண்மை புலனாகிறது. இருவரும் இந்தியாவிற்கு விசா அனுமதி பெற்றுதான் வந்திருப்பார்கள். இந்திய அரசு மத பிரச்சாரம் செய்வதற்கு விசா வழங்குவது கிடையாது.
இவ்வாறிருக்கையில் இருவரும் அயல்நாட்டு மதத்தை இந்தியாவிற்குள் மதகலவரத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்படுவார்கள் என்பதில் உண்மை உள்ளது. எனவே மேற்படி இருவருடைய பாஸ்போர்ட்டையும், விசாவையும் பறிமுதல் செய்து ஆய்வு செய்து அவர்கள் மதப்பிரச்சாரம் செய்ய வந்ததை ஊர்ஜிதப்படுத்தி அவர்கள் இனி இந்தியாவிற்குள் வர அனுமதியை மறுப்பதுடன் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து தூத்துக்குடியில் மதகலவரம் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


