தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 6-ம் தேதி மொகரம் அனுசரிக்கப்படுகிறது என்று காஜிகள் கூட்டமைப்பு செயலாளர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் ஆண்டு தொடக்கமான முகரம் மாதத்தின் பிறை இன்று (அதாவது நேற்று) காயல்பட்டினம் பகுதியில் தென்பட்டது. இதனை தொடர்ந்து முகரம் பிறை 1-ம் நாள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது.
முஸ்லிம்களின் 1447-ம் ஆண்டின் முதல் மாதமான முகரம் மாதம் முதல் நாள் முஸ்லிம்களின் புத்தாண்டின் தொடக்கமாக கொண்டாடப்படுகிறது. அதே போன்று வருகிற 5, 6-ந் தேதி முஸ்லிம்களின் நோன்பு வைத்து, 6-ந் தேதி மொகரம் அனுசரிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு செயலாளர் முஜிபுர் ரகுமான் தெரிவித்து உள்ளார்.


