தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் புதிய பேருந்து நிறுத்தம் கட்டுமானப் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே என்டிபிஎல் பவர் லிமிடெட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய பேருந்து நிறுத்த கட்டுமானப் பணியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகளான செயற்பொறியாளர் செல்வி, உதவி செயற்பொறியாளர் அருண்குமார், உதவி பொறியாளர் ரேணுகா, என்டிபிஎல் பொது மேலாளர் (மனித மேலாண்மை) சரவணன், மேலாளர் (மனித வள மேலாண்மை) ரகுபதி மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர் மேகநாதன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சின்னதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


