தூத்துக்குடியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார் புரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் முத்துக்குமார் (25). பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் அவரது மனைவி குழந்தையுடன் மதுரைக்கு சென்றுவிட்டு, நேற்று இரவு திரும்பி வந்துள்ளார். அப்போது முத்துக்குமார் படுக்கை அறையில் தூக்கில் தாெங்கினார்.
இதையடுத்து அவரது மனைவி 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். மருத்துவ உதவியாளர்கள் வந்து பரிசோதித்து பார்த்துவிட்டு, முத்துக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் திருமுருகன் சம்பவ இடத்துக்கு உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


