மாணவ, மாணவிகளின் நலன் கருதி தோழப்பன்பண்ணையில் இருந்து அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், “எங்கள் ஊரில் இருந்து மேற்படிப்பு படிப்பதற்கு மாணவ, மாணவிகள் ஸ்ரீவைகுண்டம் செல்ல வேண்டியுள்ளது. இதுபோல ஆழ்வார்கற்குளம், செந்திலான் பண்ணை, பத்மநாப மங்களம் போன்ற ஊர்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் ஸ்ரீவைகுண்டம் சென்று படிக்கிறார்கள். அவர்களின் நலன் கருதி அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


