மருதூர் மேலக்கால் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணையில் கார் கால சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தெற்கு மாவட்ட பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பாஜக நிர்வாகிகள் அளித்த மனுவில், “மருதூர் மேலக்கால் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணையின் தென்காலினை உடனடியாக திறந்து 25ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களில் கார்கால சாகுபடியில் விவசாயப் பெருமக்கள் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும்.
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள தெற்கு மண்டல குப்பை மறுசுழற்சி மைய நுழைவு வாயிலை அதன் பின்புறம் உள்ள தொழில் புறம்போக்கு இடத்தின் வழியாக மாற்ற வேண்டும். திருநெல்வேலி – திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர்-திருநெல்வேலி செல்லும் அனைத்து பேருந்துகளையும் தென்திருப்பேரை பேருந்து நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச் செயலாலர் ஆறுமுகம், மாவட்ட துனை தலைவர்கள் சிவராமன், மாசானம், மாவட்ட பொருளாளர் பரமசிவன், மண்டல் தலைவர்கள் மாதவன், மணிகண்டன், சிவஜோதி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


