தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் சாராள் தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் – முன்னாள் மாணவியர்கள் சங்கம் இணைந்து காசநோயாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் (காசநோய்) சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் செ.சக்தி பிரியா, சித்த மருத்துவ அலுவலர்
ச.செல்வகுமார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா அனைவரையும் வரவேற்று பேசினார்.
சாராள் தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் – முன்னாள் மாணவியர்கள் சங்கம் சார்பில் வழங்கிய கல்வி உபகரணங்களை
துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் (காசநோய்) டாக்டர்.க.சுந்தரலிங்கம் காசநோயாளிகளின் குழந்தைகளுக்கு வழங்கி பேசுகையில், சாரா டக்கர் மாற்றுத்திறனாளியான பெண் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் 1843 இல் முதன் முதலாக சாதாரண பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு, பிற்காலத்தில் பள்ளியை தரம் உயர்த்தி கல்லூரியாக 1895 ஆம் ஆண்டில் பெண்களுக்கான முதல் கல்லூரியாக செயல்பட தொடங்கியது. சாரா டக்கர் மறைவுக்குப் பிறகும் தோற்றுவிக்கப்பட்ட சமூகப் பணியுடன் கூடிய கல்விப் பணி இன்றளவும் காலத்தால் அழியாமல் உள்ளது. சாரா டக்கரை போன்று கல்வியில் தொடர் சேவையாற்றி வரும் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் – முன்னாள் மாணவியர்கள் சங்கத்திற்க்கும் குறிப்பாக எஸ்தர் ராஜம் லயனல், சுந்தரா, விஜயா ராஜகோபால், புஷ்பா இராஜகோபால், ஜூலி வனிதா ராணி, ஹேனா செல்வி ஆகியோர்களுக்கும்
சுகாதார துறையின் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்கள்.
இறுதியாக மாவட்ட காசநோய் மைய தீர்வு முறை அமைப்பாளர் ச.குப்புசாமி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் பா.மோகன் சுகாதார பார்வையாளர் ந.முத்து லக்ஷ்மி, சுகாதாரத் துறை பணியாளர்கள், காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் சாராள் தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் – முன்னாள் மாணவியர்கள் சங்கம் ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.


