பழமையான சிவன் கோயில்களான செய்துங்கநல்லூர்-கொங்கராயகுறிச்சி கும்பாபிசேகம் 8 ந்தேதி காலை 7.15க்கு நடைபெறுகிறது. இதையொட்டி கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
தென்னகத்தின் தில்லை என போற்றப்படுவது செய்துங்கநல்லூர் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் கும்பாபிசேகம் வருகிற 8 ந்தேதி காலை 7.15 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி 5ந்தேதி அதிகாலை 4.30மணிக்க மங்கல இசை , திருமுறை பாராயணம், அனுக்ஞை விக்னேஷ்வர பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் ஆரம்பமானது. இரண்டாம் நாள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வரப்பட்டது. இதில் கோமாதா, ஒட்டகம், மற்றும் நாட்டுப்புற கலைகளான பொம்மலாட்டம் மயிலாட்டாம், பஞ்ச வாத்தியம் முழங்க தீர்த்தம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இந்த ஊர்வலம் செய்துங்கநல்லூர் பஜாரை சுற்றி வந்து கடம் யாகசாலை பிரவேசம் மற்றும் முதற்சாலை யாகசாலை பூஜைகள் ஆரம்பமானது.
கும்பாபிசேக பூஜைகளை வெங்கடாசலம் வாத்தியார், பாலசுப்பிரமணியன் வாத்தியார் தலைமையில் அர்ச்சகர் முத்துராமன் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் மாரியப்பன், ஆன்மிக பேரரவையினர் செய்திருந்தனர்.
இதே போல் மண்ணுக்குள் மூழ்கி கிடந்த கொங்கராயகுறிச்சி சட்டநாதர் கோயில் கும்பாபிசேகமும் வருகிற 8 ந்தேதி காலை நடைபெறுகிறது.இந்த ஆலயம் தென்னகத்தின் சீர்காழி என போற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அற்காவலர் அரிசா சோ. தியாகராஜன், கோயில் அர்ச்சகர் குணசேகரன் பட்டர் உள்பட பக்தர்கள் செய்து வருகின்றனர்.


