தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சித் தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா தூத்துக்குடியில் நடைபெற்றது
தூத்துக்குடியில் அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சித் தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா, வைர விழா மலர் வெளியீட்டு விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினரும் எம்பவர் இந்தியா கௌரவ செயலாளருமான ஆ.சங்கர் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் காற்றிடம் சொன்ன ரகசியம் என்ற வைர விழா மலரும் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் தர்மன், தென்காசி புன்னைவனம், சென்னை கருணாகரன், ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜாராம், முனைவர் ராமகண்ணன், விவசாயி சண்முகம் மல்லுச்சாமி உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் ஏற்புரை வழங்கினார். முன்னதாக ஆதித்யா ராதாகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். கீதா ராதாகிருஷ்ணன் நன்றியுரை கூறினார்.


