கழுகுமலை அருகே கோவில் திருவிழாவில் மதுபோதையில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே உள்ள கே.வெங்கடேஸ்வர புரம் கிராமத்தை சேர்ந்த முத்தையா மகன் வேல்ராஜ் (35). சமையல் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வேல்ராஜ் நேற்று முன்தினம் இரவு ஊரில் நடந்து கொண்டிருந்த காளியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார்.
அங்கு மது போதையில் அங்கிருந்த பொதுமக்களிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கழுகுமலை போலீசார் அவரை எச்சரித்து வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் போலீசாரை அவதூறாக பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி வழக்கு பதிவு செய்து வேல்ராஜை கைது செய்தார்.


