குலசேகரன்பட்டினத்தில் நடத்தை சந்தேகத்தில் மனைவியை கணவர் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் மருத்துவமனை தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் வெங்கடேசன் (48), இவரது மனைவி பார்வதி (45) இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வெங்கடேசன் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். வெங்கடேசன் தனது மனைவி பார்வதி நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தாராம்.
இந்த நிலையில், நேற்று இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்து அவர் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் ஆத்திரத்தில் அங்கு கிடந்த பெரிய கல்லால் மனையின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பார்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து குலசேகரப்பட்டனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வதி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


