தூத்துக்குடியில் 30 ஆண்டுகளாக திமுக மாவட்ட செயலாளராக பணியாற்றி மறைந்த என்.பெரியசாமியின் 8வது ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் தனியாக பிரிந்த 1987ஆம் ஆண்டு முதல் தன் இறுதிக்காலம் வரை மாவட்ட செயலாராக பணியாற்றியவரும் முத்தமிழறிஞர் கலைஞரால் முரட்டு பக்தன் என்று அழைக்கப்பட்டவரும் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய தளகர்த்தர்களில் ஒருவருமாக திகழ்ந்தவருமான என்.பெரியசாமியின் 8வது ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள அன்னாரது நினைவிடத்தில் என்.பெரியசாமியின் மனைவி எபனேசர், அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்எல்ஏ, பெரியசாமியின் மகன் ராஜா பெரியசாமி, மேயர் ஜெகன் பெரியசாமி, மற்றும் அரசியல் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் சுமார் 500 பேருக்கு வேட்டி, சேலை போன்ற நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் முரளிதரன், மதிமுக ரமேஷ், முருகபூபதி, இந்திய கம்யூனிஸ்ட் கரும்பன், ஞானசேகரன், சிபிஎம் முத்து, லாரி புக்கிங் அசோசியேஷன் தலைவர் சுப்புரஜ், வணிகர் சங்கத் தலைவர் விநாயக மூரத்தி, ஓட்டல் உரிமாயளர்கள் சங்கத் தலைவர் செந்தில் ஆறுமுகம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


